சோகத்தில் இருக்கும் சாய் பல்லவி
தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வருகிறார் சாய்பல்லவி. பாலிவுட்ல ரன்பீர் கபூருடன் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், நடிகர் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தாய்லாந்தில் உருவான ‘ஒன் டே’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.சுனில் பாண்டே இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் படத்தின் முக்கியமான காட்சிகள், ஜப்பானின் சப்போராவில் நடக்கும் பனி திருவிழாவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கடந்த நவம்பர் 7-ம் தேதி வெளியாக இருந்தது. பின்னர் டிசம்பர் 12-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை மாதத்துக்கு ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர். இதனால் சாய் பல்லவி மிகுந்த சோகத்தில் இருக்கிறாராம்.