NDTV விஜய்யை நேர்க்காணல் செய்துள்ளதாக கூறியுள்ளது.
இதிலுமா Work from home Politics?
இதில் காமெடி என்னவென்றால் அது ஆஃப் கேமரா பேட்டியாம். (அப்ப விஜய் பேட்டி கொடுத்ததற்கு ஆதாரம் ஒரு போட்டோ மட்டும் எடுத்து போட்டுக்கங்க)
உலகில் ஆஃப் கேமராவில் பேட்டி கொடுத்த ஒரே தலைவன் நம்மாளுதான். அதிலும் புரட்சி பண்ணியிருக்கிறார்.
முதல்வர், எதிர்கட்சித்தலைவர்கள் எல்லாம் நேரில் வந்து மக்களோடு, ஆளுமைகள் முன் அமர்ந்து பேட்டி கொடுக்க இவர் அதிலும் வராமல் மறுத்து டீமை வீட்டுக்கு வரவழைத்து ஆஃப் கேமரா பேட்டி கொடுத்துள்ளார்.
வர்க் பிரம் ஹோமில் ஊழியர்கள் ஆஃப் கேமரா முன் அமர்ந்து குரல் மட்டுமே கொடுப்பார்கள், அதுமாதிரி. இதில் கூடவா வர்க் ஃபிரம் ஹோம். படு காமெடி தலைவரா இருக்கிறார் விஜய்.
அவர் பேட்டி கீழே….
கேள்வி: நீங்கள் இதுவரை தேசிய ஊடகங்களுடன் உரையாடியதே இல்லை. இப்போது மட்டும் ஏன்?
விஜய்: ஆமாம், தேசிய ஊடகங்களுடனான எனது முதல் உரையாடல் இதுதான். இதை ஒரு வகையான ‘மாதிரி நேர்காணல்’ (Mock Interview) என்றுதான் நான் கூறுவேன். நான் போதுமான அளவு பேசுவதில்லை என்று மக்கள் கருதுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நான் எனது உரைகள் (Speeches) மூலமாகப் பேசுகிறேன். நான் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்.
கேள்வி: நீங்கள் ஒரு கிங்மேக்கரா (Kingmaker)?
இந்த கேள்விக்கு அதிர்ச்சியுடன் பார்த்த விஜய்
: நான் எதிர்காலத்திற்காகப் போராடுகிறேன், வெற்றி பெறவே போராடுகிறேன். என்று பதிலளித்துள்ளார்.
கேள்வி: நீங்கள் நேரடியாகப் பதிலளிக்கத் தயங்குகிறீர்கள் அல்லது தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறீர்கள் என்று பலர் கருதுகிறார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?
விஜய்: அது உண்மை என்று நான் நினைக்கவில்லை. இன்று அனைத்துக் கேள்விகளுக்கும் நான் நிதானமாகவும் தெளிவாகவும் பதிலளித்தேன். நான் ஏன் இங்கு இருக்கிறேன் என்பதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். நான் சினிமாவை விட்டுவிட்டேன். இதுதான் (அரசியல்) எனது எதிர்காலம்.
4. அரசியல் வருகை மற்றும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் குறித்த பதில்
அரசியல் வருகை: கோவிட் காலத்திற்குப் பிறகு நான் அரசியலில் ஈடுபடுவது குறித்து மிகவும் தீவிரமாகச் சிந்தித்து வருகிறேன். இது திடீரென எடுத்த முடிவு அல்ல.
ஜன நாயகன் திரைப்படம்: எனது அரசியல் வருகையால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் பாதிக்கப்பட்டுள்ளதற்காக எனது தயாரிப்பாளருக்காக நான் வருத்தப்படுகிறேன். அரசியலால் திரைப்படங்கள் பாதிக்கப்படலாம் என்பதை நான் எதிர்பார்த்தேன், அதற்காக மனதளவிலும் தயாராக இருந்தேன்.