எனக்கு கிடைத்த வெற்றி….!!ஹபீபி’ நாயகன் ஈசா பேட்டி

எனக்கு கிடைத்த வெற்றி….!!ஹபீபி’ நாயகன் ஈசா பேட்டி
தமிழ் சினிமாவில் ஏராளமான புதுமுகங்கள் அறிமுகமாகின்றனர். ஆனால் முதல் படத்திலேயே சிறந்த கதை, வலுவான கதாபாத்திரம், திறமையான இயக்குநர், ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு என அனைத்தும் ஒருசேர கிடைப்பது மிகவும் அரிது. அந்த அரிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘ஹபீபி’ படத்தின் கதாநாயகன் ஈசா.மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி பயின்று வரும் மாணவர். அதேநேரத்தில் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை யும் பரிசுகளையும் வென்ற விளையாட்டு வீரரும் ஆவார். விளையாட்டின் மூலம் பெற்ற ஒழுக்கம், விடாமுயற்சி, கட்டுப்பாடு ஆகியவ ற்றையே சினிமாவிலும் தனது பலமாக மாற்றிக் கொண்டுள்ளார்.திரைப்படத் துறையில் தனது பயணத்தை தயாரிப்பாளரும் இயக்குநருமான ஆதம் பாவா இயக்கத்தில், நடிகர் அமீர் நடித்த ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியதன் மூலம் தொடங்கினார். இந்த பயணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட தகவல் வருமாறு, ஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது, காட்சியை எப்படி வடிவமைப்பது, நடிகர்களிடமிருந்து இயக்குநர் எப்படி நடிப்பை வெளிக்கொண்டு வருகிறார் என்பதையெல்லாம் உதவி இயக்குனராக இருந்தபோது நேரடியாகக் கற்றுக்கொண்டேன். அந்த அனுபவம்தான் இன்று ஒரு நடிகராக என்னைத் தயார்படுத்தி க்கொள்ள உதவியது.அதன்பிறகு இயக்குநர் அஸ்லம் மூலம், இயக்குநர் மீரா கதிரவன் தனது ‘ஹபீபி’ படத்திற்கான நடிகர் தேர்வை நடத்துவதாக அறிந்து ஆடிஷனில் பங்கேற்றார். ஆடிஷனுக்குப் பிறகு ஆறு மாதங்கள் எந்தத் தகவலும் இல்லாத நிலையில், ரிகர்சலுக்கு அழைப்பு வந்தபோதுதான் கதாநாயகனாக தேர்வாகியிருப்பது உறுதியானது.முதல் நாளிலிருந்தே இயக்குநரின் நம்பிக்கையை எந்தக் காரணத்திற்காகவும் இழக்கக் கூடாது என்பதே என் எண்ணமாக இருந்தது. அதற்காக ஒவ்வொரு நாளும் முழு அர்ப்பணிப்புடன் தயாராகி சென்றேன். நடிப்பு பயிற்சிகள், ஒர்க்ஷாப்கள் மற்றும் தொடர்ச்சியான ரிகர்சல்கள் மூலம் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொண்டேன். ஹீரோ என்ற மனநிலையோடு அல்லாமல், கதையின் கதாபாத்திரமாகவே என்னை மாற்றிக் கொண்டேன். அதனால் என் நடிப்பு மிகவும் இயல்பாக வெளிப்பட்டது. முதல் படத்திலேயே இளம் வயது மற்றும் நடுத்தர வயது தோற்றங்களில் குரல், உடல்மொழி, முகபாவனைகளில் வித்தியாசம் காட்டி நடித்தது மிகப்பெரிய சாதனை என்றும்,இது எல்லோருக்கும் கிடைக்காத என்றும் பலரும் என்னை பாராட்டினர். எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கும், பாராட்டுகளுக்கும், புகழுக்கும் முழுச் சொந்தக்காரர் என் இயக்குநர் மீரா கதிரவன்தான்.‘ஹபீபி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளேன் என கூறினார்.

Comments (0)
Add Comment