ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருப்பதில் என்ன தவறு?

ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருப்பதில் என்ன தவறு?

விஷ்ணு விஷால் நெத்தியடி பதில் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி ‘ஹிட்’ அடித்த படம், ‘கட்டா குஸ்தி’. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் ‘கட்டா குஸ்தி-2’ என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு இப்படத்தையும் இயக்கியுள்ளார்.விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ஐசரி கணேசின் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷன ல் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும்ஜூலை 3-ந் தேதி ரிலீசாகிறது. இதை முன்னிட்டு விஷ்ணு விஷால் அளித்த பேட்டியில் படம் பற்றி கூறியது, எனக்கு ரொம்ப நாளா பார்ட் 2 படங்கள் அமையவே இல்ல.முண்டாசுப்பட்டி,வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், ராட்சசன், எப்.ஐ.ஆர். என நான் நடித்த பல படங்களின் இரண்டாம் பாகம் எடுக்க ஆசைப்பட்டேன். காலம் கைகொடுத்தாலும்,இயக்குனர்களும் கைகொடுக்க வேண்டும் அல்லவா…. அந்த வகையில் கட்டா குஸ்தி மூலமா அந்த ஆசை நிறைவேறி இருக்கு. படமும் நல்ல விதமா வந்திருக்கு.மிகுந்த நம்பிக்கையுடன் திரைக்கு கொண்டு வருகிறோம்.முதல் பாகத்தில் ஐஸ்வர்யா லட்சுமியை குஸ்தி
வீராங்கனையாக காட்டியிருந்தோம். இந்த பாகத்தில் புத்தி வீராங்கனையான மனைவி ஜெயிப்பதற்காக ‘ஹவுஸ்ஹஸ்பெண்ட்’ ஆக மாறிய கணவனை பற்றி சொல்லியிருக்கிறோம். டிரெய்லரில் மனைவியின் துணியை நான் துவைக்கும் காட்சியை பார்த்து விட்டு,‘என்ன சார்… வீட்டிலும் இதேகதை தானா?’என்று கேட்கிறார்கள். எனக்காகவும்,என் குடும்பத்துக்காக பாடுபடும் என் மனைவிக்கு பணிவிடை செய்ய தயார் தான். அதில் எனக்கு சந்தோஷமும் கூட. எத்தனையோ கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும் காமெடி படங்களில் நடிப்பது மிகவும் கடினம். ஆனால் எனக்கு காமெடி படத்தில் நடிக்க பிடிக்கும். வருடத்துக்கு ஒரு படமாவது காமெடி படம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். விரைவில் ‘ராட்சசன்-2’ படம் தொடங்க திட்டமிட்டுள் ளோம். ராம்குமார் அவருடைய கமிட்மெண்ட்ஸ் முடித்துவிட்டு வந்தால் தொடங்கிவிடும். என்று நம்புகிறேன். எனது ‘இண்டு வானம்’ படமும் விரைவில் ரிலீசுக்கு வரும் என்றார்.

பொண்டாட்டி ஸ்போர்ட்ஸ் உமனா இருந்தா என்ன ஆகும் தெரியுமா?
விளையாட்டு வீராங்கனைகளுக்கு மைதானம், வீடு ரெண்டுமே ஒன்னு தான். போட்டியில் வந்தால் அவங்க தான் ஜெயிக்கணுன்னு நினைப்பாங்க, அதேபோல் தான் என் மனைவியும். வீட்ல சண்டைன்னு வந்தா அவங்க தான் ஜெயிப்பாங்க. நாம தோக்கறது தவிர வேற வழி இல்ல….!!

Comments (0)
Add Comment