தனுஷ் படத்திற்கு ஓம் என டைட்டில் வைத்தது ஏன்? (அல்லது) ஹீரோ தனுஷ்.. பெரிய பட்ஜெட்… ரிலீஸ் தேதி முடிவு.. ஓம் படம் பிரஷரா?

தனுஷ் படத்திற்கு ஓம் என டைட்டில் வைத்தது ஏன்? (அல்லது) ஹீரோ தனுஷ்.. பெரிய பட்ஜெட்… ரிலீஸ் தேதி முடிவு.. ஓம் படம் பிரஷரா?

ராஜ்குமார் பெரியசாமி பளிச் பதில் ‘அமரன்’ படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் தனுஷை வைத்து புதுமையான திரைக்கதையுடன், ரசிகர்களை கவரும் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.மேலும் இதில் முக்கியமான கேரக்டரில் மம்முட்டி நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் இந்த படத்திற்கு ஓம் என்ற டைட்டில் வைத்துள்ளதை ஒரு க்ளிம்ஸ் வீடியோவுடன் அறிவித்தனர்.இப்படம் வரும் அக்டோபர் மாதம் 16ம் வெளியாகிறது.இந்த நிலையில்
படம் பற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் வருமாறு,

கேள்வி:டைட்டில் பற்றி சொல்லுங்க…
பதில்: இந்த படத்திற்கும், இந்த கதைக்கும் பொருத்தமான தலைப்பாக ‘ஓம்’ அமைந்துள்ளது. படம் பார்க்கும்போது உங்களுக்கு ஓம் என்ற தலைப்பு ஏன் என்பது புரியும்.
கேள்வி: தனுஷ் மற்றும் நடிகர்கள் பற்றி சொல்லுங்க..
பதில்:தனுஷ் முதல் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கலைஞர்கள் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்து வருகின்றனர். குறிப்பாக, மம்முட்டி சார், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன் சார் உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பாலும் படம் மிகவும் சிறப்பாக உருவாக வருகிறது.

கேள்வி:ஓம் படத்தில் பணியாற்றும் டெக்ஸ் டெக்னீசியன் பற்றி..
பதில்: இந்தப் படத்தின் பின்னணியில் மிகப்பெரிய தொழில்நுட்பக் குழு பணியாற்றி வருகிறது. மியூசிக் டைரக்டராக இன்றைய இளம் தலை முறை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் டிஓபி-யாக ஒளிப்பதிவாளர் எழிலரசு ஆகியோர் மிகச்சிறப்பாக பணியாற்றி உள்ளார். படத்தொகுப்பாளராக ‘அமரன்’ மற்றும் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ படங்களின் படத்தொகுப்பாளர் கலை பணியாற்றி வருகிறார். இந்த தலைப்பு அறிவிப்பு வீடியோவையும் அவர்தான் எடிட் செய்து கொடுத்தார்.

கேள்வி: டைட்டில் அறிவிப்புக்கு இப்படி ஒரு பில்டப் வீடியோ தேவையா?
பதில்:இந்த வீடியோவை வெறும் தலைப்பு அறிவிப்பு வீடியோவாக மட்டும் பார்க்கக் கூடாது. ஒரு போஸ்டரை வெளியிடுவதற்கு பதிலாக, தனுஷ் ஏற்றுள்ள கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு முதன்முறையாக அறிமுகப்ப டுத்தும் முயற்சியாக இதை உருவாக்கியுள் ளோம். படத்தின் டீசர், ஒவ்வொரு முக்கிய கதாபாத்திரத்திற்கான அறிமுக டீசர்கள் மற்றும் பிரதான டிரெய்லர் ஆகியவை அடுத்த சில வாரங்களிலும், வரும் மாதங்களிலும் வெளியாகும்.

கேள்வி: இந்தப் படம் எத்தனை பாகங்களாக வரப்போகிறது?
பதில்: இந்த படத்திற்கு ‘ஓம் சேப்டர் 1’ என்று பெயரிட்டுள்ளோம். இது ஆன்மீகமான தலைப்பு மட்டுமல்ல; மிகவும் சிறப்பான, பல அடுக்குகளைக் கொண்ட அர்த்தமுள்ள தலைப்பாகும். இந்த தலைப்பிற்குள் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. அவை படிப்படியாக ரசிகர்களுக்கு புரியும். முதல் பாகத்திற்கான கதையை முடித்து தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த பாகத்திற்கான திரைக்கதைக்கு நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டி உள்ளது. இந்த படம் வெளியான பிறகு அடுத்த பாகவதற்கான பணிகள் துவங்கும். இருப்பினும் இந்த படத்திற்கான துவக்கம், இன்டர்வல் பிளாக், முடிவு என அனைத்துமே இருக்கும்.

கேள்வி: ரிலீஸ் தேதி அறிவித்துள்ளீர்கள், இந்த பிரஷர் எப்படி உள்ளது?
பதில்: அக்டோபர் 16ம் தேதி ரிலீஸ். அன்று இந்தப் படத்திற்கு மிகவும் முக்கியமான நாளாக இருக்கும். சரியான திட்டமிடலுடன் ஷூட்டிங் நடந்து வருகிறது.மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏற்கனவே முன் தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதால் தற்போது எனக்கு எந்தவித பிரஷரும் இல்லை. ரொம்ப ரிலாக்ஸாக படம் எடுத்து வருகிறோம்.

Comments (0)
Add Comment