கொலைச்சேவல்- விமர்சனம்
தீபா பாலுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட கலையரசன், மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தனது குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்க செல்கிறார். அங்கு சாமி கும்பிட்ட பிறகு வீட்டுக்கு திரும்பும் போது ஒரு கும்பல் கலையரசனை அடித்து விட்டு மனைவியை வெட்டி சாய்க்கின்றனர். இந்த கொலையின் பின்னணி என்ன? எதற்காக அவர்கள் தீபாவை வெட்டினார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. காலம் மாறினாலும் சமூகத்தில் இன்னும் சில இடங்களில் ஜாதி வெறி பிடித்த ஆணவக் கொலைகள் நடந்து வருவதை இந்த கொலை சேவல் படம் மூலமாக இயக்குனர் துதி வாணன் கொஞ்சம் கொடூரமாகவே காட்டியுள்ளார். ஒரு சின்ன கதை என்றாலும், தனது திறமையான நடிப்பின் மூலம் அந்த கேரக்டரை தாங்கி பிடிக்கிறார் கலையரசன். கர்ப்பிணியாக நடித்துள்ள தீபா பாலு அற்புதமாக நடித்துள்ளார். நண்பனாக வரும் பால சரவணன் கிளைமாக்ஸ் காட்சியில் கதற விட்டுள்ளார். வில்லனாக நடித்துள்ள ஆதவ் சந்திரா கவனம் இருக்கிறார். டயலாக் இல்லாமல் உடல் மொழி மூலம் கஜராஜ் அற்புதமாக நடித்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு, சாந்தினியின் இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.