ஹாப்பி ராஜ் -விமர்சனம்
உருவகேலியால் அவமானத்தை சந்தித்து வந்த ஜார்ஜ் மரியானுக்கு பல வருடங்கள் கழித்து ஜி.வி.பிரகாஷ் பிறக்கிறார். தான் பட்ட அவமானத்தை துடைக்க மகனை நல்ல முறையில் வளர்த்து படிக்க வைக்கிறார். ஆனால் அவரும் அதே உருவ கேலியில் சிக்கிக் கொள்கிறார். இதனால் சொந்த ஊரை விட்டு பெங்களூருக்கு செல்லும் ஜிவி பிரகாஷ், அங்கு கவுரி பிரியாைவ சந்தித்து
காதலிக்க தொடங்கி, நிச்சயம் வரை செல்கிறது. அப்போது மாமனார் அப்பாஸ், ஜிவி பிரகாஷ் இருவருக்கும் மோதல் ஏற்பட திருமணம் நின்றுவிடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. உருவ கேலியை வைத்து, அதை சமூகப் பிரச்சிைனயாக மாற்றி, அதில் இருந்து
தன்னம்பிக்கை மூலம் எப்படி வெற்றி பெறலாம் என்பதை இயக்குனர் மரியராஜா இளஞ்செழியன் அழகாக சொல்லி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஜி வி பிரகாஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளார். கௌரிப்பிரியா நடிப்பு ஓகே.அப்பாஸ் அனுபவ நடிப்பு கதைக்கு பலம்.ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசை,மதன் கிறிஸ்டோபர் ஒலிப்பதிவு ரசிக்க வைக்கிறது.