கோவாவில் செட்டில் ஆகும் ரவி மோகன்

கோவாவில் செட்டில் ஆகும் ரவி மோகன்
இந்தியாவில் பிரபலமாக உள்ள சுற்றுலா நகரங்களான கோவா, மணாலி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் பிரபலங்கள் வீடு வாங்குவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் இணைந்து கோவாவில் வீடு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பல லட்சம் மதிப்புள்ள அந்த சொகுசு பங்களாவில் விரைவில் இவர்கள் இருவரும் குடியேற இருப்பதாக தெரிகிறது. இனி ரவி மோகன் படங்களின் ஷூட்டிங் அடிக்கடி கோவாவில் நடக்க வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கெனிஷாவுடன் இணைந்து கோவாவில் வீடு வாங்கிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment