செல்வி கேரக்டரில் மமிதாபைஜு

செல்வி கேரக்டரில் மமிதாபைஜு
பிரேமலு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மமிதாபைஜு. தொடர்ந்து ஜிவி பிரகாஷ் உடன் ரெபெல், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் விஜய் உடன் ஜனநாயகன், சூர்யாவுடன் விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களில் நடித்து குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார். தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கர’ படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படத்தில் மமிதா பைஜு, செல்வி என்ற கேரக்டரில் நடிக்கிறார். ஒரு தோற்றத்தை பட குழு வெளியிட்டது. இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி உள்ளது.

Comments (0)
Add Comment