கெணத்த கானோம் -விமர்சனம்
ராமநாதபுரம்,கோடங்கிபட்டி கிராமத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் கிடைக்காத துயரம் அங்கு வாழும் மக்களுக்கு மட்டுமல்லாமல், அந்த ஊர் கோவில் பூசாரியான யோகி பாபுவின் திருமணத்திற்கும் தடையாக மாறுகிறது. இதையடுத்து கிராம மக்கள் ஒன்றிணைந்து யோகி பாபு வீட்டு அருகே கிணறு வெட்டுகின்றனர். அப்போது கிணறு வெட்ட பூதம் வந்தது போல் ஒரு புதிய பிரச்சனை உருவாகிறது. அது என்ன என்பதே படத்தின் மீதி கதை.யோகி பாபு வழக்கமான காமெடியை தாண்டி லவ் மற்றும் எமோஷன் கலந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகிபாபுவின் காதலியாக வரும் லவ்லின் சந்திரேசகர் கதைக்கு பர்பெக்ட். கவிஞர் விக்ரமாதித்யன், ஹலோ கந்தசாமி,ராமகிருஷ்ணன், ரேச்சல் ரெபாக்கா ஆகியோர் நடிப்பு அருமை. ஆராய்ச்சி என்ற பெயரில் அரசு இயந்திரங்கள் பல கிராம மக்களின் வாழ்வியைல எப்படி நசுக்குகிறது என்பைத அந்த கிராம மக்களின் வலியோடு சொல்லி உள்ளார் இயக்குநர் சுரேஷ் சங்கையா. தியாகராஜன் ஒளிப்பதிவு, நிவாஸ் கே. பிரசன்னா இசை கதைக்கு பலம்