சிம்புவிடம் வாழ்த்து பெற்ற கென்
நடிகர் கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் 4 நாட்களில் 28.3 கோடி அளவுக்கு வசூலையும் குவித்தது. தற்போது 50 கோடியை படம் நெருங்கி உள்ளது. இந்த நிலையில் நடிகர் கென் மற்றும் பட குழுவினர் நடிகர் சிலம்பரசன் டி.ஆரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத் தியதுடன், இயக்குனராகவும் வெற்றி பெற்றுள்ளதாக சிம்பு அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்த படத்தில் சிம்புவின் ரசிகராக கென் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.