ஐடி அதிகாரி கௌரி ஹெக்டேவாக கலக்கும் தபு
பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா படம் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’. இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிகை தபு நடித்துள்ளார். ஹீரோயின் ஆக சம்யுக்தா நடித்துள்ளார். இவர்களுடன் துனியா விஜய் குமார், பிரம்ஹாஜீ, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர் தன் ராமேஸ்வர் இசை அமைத்துள்ளார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் சார்பில் பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் மற்றும் ஜே பி நாராயணன் ராவ் கொண்ட்ரோல்லா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர் . படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படத்தில் கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, அவரின் ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை விவரிக்கும் வகையில் பிரத்யேக கிளிம்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். நகரின் சேரி பகுதியை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டத்தில் நடிகை தபு, ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த எச்சரிக்கை அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த ‘பளார்’ என்ற அறையும் கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல… ,அதை கோருபவள் என்பதை உணர்த்துகிறது. அந்த கதாபாத்திரம், ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் முற்றிலும் அச்சம் ஏதும் இல்லாத மற்றும் சமரசம் ஏதும் இல்லாத ஒருவராகவும் கானப்படுகிறார். அவரை, காவல்துறையினரும், பொதுமக்கள் கூட்டமும் சூழ்ந்து இருந்தாலும், அவர் சற்றும் கலங்காமல் தனது அதிகாரத்தை தடுப்பவர் களை ஆக்ரோஷமாக அடக்குகிறார். இறுதியில் அவர் தன்னை அறிமுகப்படுத் திக் கொள்ளும் போது தான் அவரின் உச்சக்கட்டம் வெளிப்படுகிறது. ‘கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை’ எனும் அந்த அறிமுகம். அந்த கதாபாத்திரத்திற்கே உரிய வீரியத்தையும், கம்பீரத்தையும் தருகிறது. கம்பீரமாகவும், மிடுக்காகவும் இதில் தபு தோன்றுகிறார். தனது திரை தோற்றத்தில் அந்த கேரக்டரை முழுமையாக தனதாக்கிக் கொள்கிறார். அவர் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் கொண்டு வருகிறார். இது அந்த கதாபாத்திரத்தை உடனடியாக காண வேண்டும் என்ற ஆர்வத்தை நமக்கு தூண்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது.