டேட்டிங் செய்தி: டென்ஷனான மிருணாள்

டேட்டிங் செய்தி: டென்ஷனான மிருணாள்
சீதாராமம் படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். தற்போது தென்னிந்திய மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி வரும் இவர் சமீப காலமாக காதல் வதந்திகளில் சிக்கித் தவிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் உடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. பின்னர் இது குறித்து அவர் மறுப்பு தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன்,மும்பையில் ஒரு காபி ஷாப்பில் இருவரும் ஜோடியாக சுற்றித் திரிந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இதனால் இருவரும் டேட்டிங் செய்வதாக கிசு கிசுக்கப்பட்டது. இதுகுறித்து மிருணாள் தாக்கூர் வெளியிட்டுள்ள பதிவில், இருவரும் ஒன்றாக காணப்படுவதால், அவர்களுக்குள் ஒரு உறவு இருப்பதாக எப்படி நினைக்கிறீர் கள்? நிதானமாக இருங்கள். இது போன்ற வதந்திகளை உண்மை என்று எப்படி நம்புகிறீர்கள்? இது போன்ற விஷயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்காமல், நாட்டில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி யோசியுங்கள் என காட்டமாக பதில் சொல்லியுள்ளார்.

Comments (0)
Add Comment