மற்றோரு அழகான வருடத்துக்குள் அடியெடுத்து வைக்கிறேன்: ஹன்சிகா

மற்றோரு அழகான வருடத்துக்குள் அடியெடுத்து வைக்கிறேன்: ஹன்சிகா
மும்பையை சேர்ந்த நடிகை ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு தேசமுதுரு என்ற தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.அடுத்து கன்னடத்தில் 2008 ல் புனித் ராஜ்குமாருடன் பிந்தாஸ் எனும் படத்தில் நடித்தார். அதன் பிறகு 2009ல் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் வேலாயுதம், எங்கேயும் காதல்,ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, அரண்மனை, அரண்மனை 2, மனிதன்,போகன் போன்ற படங்கள் மூலம் தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தார்.
இதனால் தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.தற்போது பட வாய்ப்புகள் குறைந்திருந்தாலும், அவ்வப்போது படங்களில் நடித்து வருவதுடன், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டனர். தற்போது ஹன்சிகா மீண்டும் தனது சினிமா பயணத்தில் கவனம் செலுத்தி வருவதுடன், புதிய படங்களுக்கான கதைகளையும் கேட்டு வருகிறார்.இந்த நிலையில்,தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பிறந்தநாள் கேக் மற்றும் அலங்காரங்களுக்கு மத்தியில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்த பிறந்தநாள் கொஞ்சம் வித்தியாசமாக இருந்துச்சு அமைதியாகவும், மனசுக்கு நிம்மதியா நிறைய நன்றியோடவும் இருந்தது.குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மனசுக்கு பிடிச்ச சில பேர் கூட இந்த நாளை சந்தோஷமா கடந்துளேன்.
சின்ன சின்ன தருணங்களை ரசித்து மனசுக்கு நெருக்கமான இடங்களுக்கு சென்று ஆசீர்வாதங்களை பெற்றேன் வாழ்க்கை எனக்கு கொடுத்த எல்லாவற்றிற்கும்..என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்த ஒவ்வொரு அனுபவத்துக்கும், தொடர்ந்து என்னை சுற்றி இருக்குற அன்புக்கும் ரொம்ப நன்றி… மற்றோரு அழகான வருடத்துக்குள் அடியெடுத்து வைக்கிறேன் என ஹன்சிகா கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment