சிங்கிளா இருந்த துஷாரா மிங்கில் ஆன கதை
நடிகை துஷாராவுக்கு இந்த ஆடி மாதம் ரொம்ப அழகான மாதமா மாறி இருக்கு. அவர் நடிப்பில் ஜிடிஎன் மகுடம் என இரண்டு படங்கள் வெளியாவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் அவர், தற்போது ஹாட்ரிக் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதற்குக் காரணம் தனது லவ் குறித்து ஓப்பனாக தெரிவித்துள்ளார்.தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து துஷாரா விஜயன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.அந்த பேட்டியில் அவர் கூறியது, நான் இப்போது காதலில் இருக்கிறேன். அந்தஉறவில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதைப் பற்றி விரிவாக சொல்ல முடியாது. வாழ்க்கை மிகவும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் 2 வருடங்களாக காதலித்து வருகிறோம். ஆனால் திருமணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. என் துணைவர் என்னுடைய சினிமா நடிப்புக்கு ஆதரவாக இருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவர் எனக்கு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் தந்தையின் நண்பர் மூலம் அவரை சந்தித்தேன். காரில் ஒன்றாக பயணம் செய்து கொண்டிருக்கும் போது இளையராஜாவின் பாடல் காரில் ஒலித்தது. எனக்கும் அந்த பாடல் பிடித்திருக்கிறது என்பதை அறிந்த போது அதிர்ச்சி அடைந்தேன். இளையராஜாதான் எங்களை இணைத்த முதல் ‘காரணி’ என நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.