டிசி -விமர்சனம்
தனது அம்மாவை தாய்மாமன்களே கொலை செய்துவிட அப்பாவின் பேச்சை மீறி மாமன்களை கொன்று சிறை செல்கிறார் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு மகனை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்க தனது சொத்தை விற்று பணத்துடன் செல்லும் ஒருவரை போலீஸார் அந்த பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்ய, அந்த போலீஸ்காரரை தனது டீமுடன் சென்று போட்டுத் தள்ளுகிறார். இதன் மூலம் பெரிய கேங்ஸ்டராக மாறுகிறார். இதனால் போஜராஜன் தலைமையில் ஒரு போலீஸ் டீம் லோகேஷ் மற்றும் அவனது ஆட்களை சுட்டுப் பிடிக்க வேட்டையாடு கிறது. அந்த டீமிடம் இருந்து தேவதாஸ் தப்பித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை. ஹீரோ கேங்ஸ்டராக இருந்தால் போலீஸ் வில்லனாக இருக்கும் அதே டெம்பிளேட் கதையை தான் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கொடுத்துள்ளார்.இருப்பினும் ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் களம் இறங்கி சம்பவம் செய்துள்ளார்.ஒவ்வொரு ஃப்ரேமிலும் உள்ள ஆழம் கடைசி வரை எந்த இடத்திலும் போர் அடிக்காமல் நடித்துள்ளார். ஹீரோயின்கள் சஞ்சனா மற்றும் வாமிகா கபி இருவரும் ரைட் சாய்ஸ். முகேஷ் ஒளிப்பதிவு மற்றும் அனிருத் இசை படத்திற்கு பிளஸ்.