மங்காத்தா டிக்கெட் விலை இவ்வளவா!!
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, பிரேம்ஜி, மகத் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் மங்காத்தா. சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் அஜித்தின் 50வது படமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அஜித்துக்கு 100 கோடி வசூலை ஈட்டித் தந்தது. இந்நிலையில், மங்காத்தா ரீ ரிலீஸ் இன்று வெளியாகவுள்ள நிலையில்,முன்பதிவு வசூல் வேறலெவலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு 1500 ரூபாய்க்கு எல்லாம் டிக்கெட்டுகள் விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது.மங்காத்தா படம் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டும் 1.7 கோடி ரூபாய் வசூலை செய்துள் ளது குறிப்பிடத்தக்கது.