ரஜினிக்கு வில்லியாக மிரட்டும் வித்யா பாலன்
ரஜினி நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படம் அக்டோபர் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதை ஒட்டி படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்களை இயக்குனர் அறிமுகப்படுத்தி வருகிறார். ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யா “போதி” என்ற கதாபாத்திரத்திலும், சுராஜ் வெஞ்சரமூடு “திலீப்” என்ற கேரக்டரிலும் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது வித்யா பாலனின் “காந்தா” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அறிமுக வீடியோவில் நீல நிற சேலை அணிந்து, கையில் சிகரெட்டுடன் படிக்கட்டுகளில் வித்யா பாலன் இறங்கி வருகிறார். “இங்கே வந்த பிறகு எங்கள் பேச்சைக் கேட்காமல் யாரும் வெளியேற முடியாது” என்று பஞ்ச் டயலாக் பேசுகிறார். ரஜினிக்கு எதிரான பவர்புல் கதாபாத்திரமாக காந்தா இருக்கும் என்று தெரிகிறது.மேலும் இந்த படத்தில் மிதுன் சக்ரவர்த்தி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.