‘ ஆல்மோஸ்ட் நல்லவன்’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராஜு!

‘ ஆல்மோஸ்ட் நல்லவன்’ படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் ராஜு!
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்கிறார். சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்த நிலையில், தற்போது படக்குழு தென்காசியில் 2ம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டார்க் ஹியூமர் ஜானரை சேர்ந்த இப்படத்திற்க்கு டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்ய,பாக்ஸ்ன் இசை அமைக்கிறார்.

Comments (0)
Add Comment