இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம் ஸ்மாஸ்

இந்தியா – ரஷ்யா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் படம் ஸ்மாஸ்
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற டிமான்டி காலனி 2 படத்தை தயாரித்ததோடு, பல்வேறு இந்தியத் திரைப்படங்களை ரஷ்யாவில் விநியோகம் செய்து வரும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தற்போது ரஷ்யாவைச் சேர்ந்த செமினா பிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து புதிய இந்தோ-ரஷ்ய திரைப்படமான ஸ்மாஸ் படத்தை உருவாக்கி வருகிறது. தோல்வியைச் சந்தித்த பின்னர், தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மீண்டும் எழுந்து வெற்றியை நோக்கிப் பயணிக்கும் பேட்மிண்டன் வீரரை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. இப்படத்தை இந்தியாவைச் சேர்ந்த விஜய் சுப்ரமணியன் மற்றும் காசி விஸ்வநாதன் ஆகியோரும் ரஷ்யாவைச் சேர்ந்த எகத்தெரினா கோலுபேவா இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Comments (0)
Add Comment