ரசிகர்களை இனி தொடர்ந்து மகிழ்விப்பேன்: மாளவிகா

ரசிகர்களை இனி தொடர்ந்து மகிழ்விப்பேன்: மாளவிகா
நடிகை மாளவிகா சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்துள்ளார், நேற்று வெளியான ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து மாளவிகா கூறியது, ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்தியாசமா ன கேரக்டரில் நடித்திருக்கிறேன். இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நான் நடித்திருந்தாலும், இந்த படத்தில்தான் முதல் முறையாக நான் சொந்தக்குரலில் பேசியிருக்கிறேன். என்னை பேச வைத்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நன்றி. பிரதீப் ரங்கநாதன் ஒரு சிறந்த நடிகர். அவருடன் இணைந்து நடித்திருப்பது அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது. இனிமேல் தொடர்ந்து எல்லா மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன்’ என்றார்.

Comments (0)
Add Comment