பரபரப்பை ஏற்படுத்திய ‘மக்கள் தலைவா’ பட போஸ்டர்
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக மக்களுக்கு அரசியல் ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர் ரவி மரியா கதையின் நாயகனாக நடித்துள்ள ‘மக்கள் தலைவா’ படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டது. இதனை தமிழருவி மணியன் வெளியிட்டு , படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். ராம் தேவ் இயக்கியுள்ள இதில் ரவி மரியா, அக்ஷரா விஜய், ராதா ரவி, பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் கே எஸ் நாயர் ஒளிப்பதிவு செய்ய, துளசி ராமன் இசையமைத்துள்ளார்.கற்பனன கதையுடன் நிகழ்கால அரசியலை காமெடியாக சொல்லும் இந்த படத்தை ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கவிதாலயா சரவணன் மற்றும் ஆர். சந்திரசேகர் தயாரித்துள்ளனர்.