வெப்தொடர்களில் நடிக்க மறுத்த கயாடு
டொவினோ தாமஸ் ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ என்ற படம் இன்று ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கயாடு லோஹரிடம், தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்காதது ஏன்? என்று கேட்கப்பட்டது. ‘நான் சரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன். நல்ல அழுத்தமான கதைகளுடன் திரும்பி வந்து ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ‘டிராகன்’ வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் எனக்கு கொடுத்த அன்பும், ஆதரவும் மிகவும் பெரிது. இன்னும் விதவிதமான கதைகளை தேர்ந்தெடு க்க விரும்புகிறேன். சரியான கதை அமைந்தவுடன் அதுபற்றி அறிவிப்பேன்’ என்றார்.மேலும் வெப்தொடர்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டதாக சொன்னார். தமிழில் ‘இம்மார்ட்டல்’, ‘இதயம் முரளி’ ஆகிய படங்களில் கயாடு லோஹர் நடித்துள்ளார்.