வட அமெரிக்காவில் இளையராஜாவின் கச்சேரி
சரிகமா லைவ் மற்றும் மெர்குரி இணைந்து, இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் வட அமெரிக்காவில் பிரம்மாண்ட கச்சேரி சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளன.வரும் ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கா மற்றும் கனடாவை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட நகரங்களில் அவர் நேரடியாக இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்சல்ஸிலுள்ள டால்பி தியேட்டரில் அவரது ஐகானிக் இசை ஒலிக்க உள்ளது. மேலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறும் பல நகரங்கள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த கச்சேரிகள் முழுமையான ஆர்க்கெஸ்ட்ரா அனுபவமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.