தலைப்புச் செய்திகள்!

தலைப்புச் செய்திகள்!

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு. இடி, மின்னலுடன், சூறைக்காற்றும் வீசும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, ராசிபுரத்தில் மழையால் சுவர் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு, 4 பேர் படுகாயம்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரில் தமிழ்நாட்டில் பல இடங்களில் போராட்டம். பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்தி பேரணி.

கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல் ஒன்றிய பாஜக அரசை அலறி துடிக்கவிட்டுள்ளது. இழிவுபடுத்தக் கூறிய வார்த்தையையே இளைஞர்கள் ஆயுதமாக்கியுள்ளதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து.

விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ., பனையூர் பாபு விலகல். அடிப்படை அரசியல் அறம் தடுமாறும் போது மவுனமாகக் கடந்து செல்ல முடியாது என விளக்கம்.

Comments (0)
Add Comment