‘‘உலகிலேயே மிக அழகான சுற்றுலாத்தலம்!’’
அந்தமான் தீவுகளின் இயற்கை எழில் நிறைந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள Rahul Gandhi, அதனை உலகிலேயே மிக அழகான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக புகழ்ந்துள்ளார்.
நீல நிற கடல், வெண்மணல் கடற்கரைகள், பசுமை சூழ்ந்த தீவுகள் மற்றும் இயற்கையின் அற்புத அழகை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.
அந்தமான் தீவுகளின் இயற்கை வளம் மற்றும் சுற்றுலா முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் ராகுல் காந்தியின் பதிவு பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இயற்கை அழகின் சொர்க்கம் என போற்றப்படும் அந்தமான் தீவுகள், சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாக தொடர்ந்து திகழ்கின்றன.