அட்லியின் லக்கி ஹீரோயின், தீபிகா தான்!
‘ஜவான்’ படத்திற்கு பிறகு அட்லி தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார்.சயின்ஸ் பிக்ஷன் படமான இது பான் வேர்ல்டு படமாக உருவாகி வருகிறது. ‘ஜவான்’படத்துக்குப் பிறகு இதிலும் தீபிகா படுகோன் நாயகியாக நடித்து வருகிறார். இதுபற்றி அட்லியிடம் கேட்டபோது, “தீபிகாவுடன் பணியாற்றுவது அற்புதமான அனுபவம். அவர் உண்மையி லேயே நம்ப முடியாதவர். அவர் என் அதிர்ஷ்டம். தாயான பிறகு அவர் நடிக்கும் படம் இது. நிச்சயம் முற்றிலும் மாறுபட்ட தீபிகாவைப் பார்க்கப் போகிறீர்கள். இந்தப் படம் பற்றிய அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நானும் அதை அவர்களுக்குக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.