புராண கதையில் நடிக்கும் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன், இயக்குனர் திரிவிக்ரம் கூட்டணியில் இதற்கு முன்பு வெளியான மூன்று படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. அதிலும் ‘அலா வைகுந்தபுரமுலூ’ படம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இவர்கள் இருவரும் தற்போது ஒரு புராண காவிய கதைக்காக மீண்டும் இணைய இருக்கிறார்கள். இது இவர்கள் இணையும் 4-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அல்லு அர்ஜூனுக்காகவே உருவாக்கப்பட்ட கதை இது என்பதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மிகுந்த உற்சாகத்தோடு இந்தப் படத்தை எதிர்பார்த்துள்ளனர். ரூ.1000 கோடி பட்ஜெட்டில்பிரம்மாண்டமான புராண கதையாக இந்த படம் உருவாகிறது. 2027-ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.