மாளவிகா மனோஜ்க்கு குவியும் பாராட்டு

மாளவிகா மனோஜ்க்கு குவியும் பாராட்டு
‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் இல்லாதது’ ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழில் நம்பிக்கைக் குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வ நடிப்பிற்காக கவனம் பெற்று வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். தற்போது,இயக்குநர் மீரா கதிரவனின் ‘ஹபீபி’ படத்தில்,அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர்.

Comments (0)
Add Comment