ஏஐ முலம் தெலுங்கு பேசிய பிரதீப் ரங்கநாதன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘எல்.ஐ.கே.’.இதில் கீர்த்தி செட்டி ஹீரோயினாக நடித்துள்ளார்.வரும் 10-ந் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இதன் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது.இதில் பங்கேற்ற பிரதீப் ரங்கநாதனுக்கு தெலுங்கு தெரியாததால் ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசியதை ஏ.ஐ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தெலுங்கில் மொழி மாற்றம் செய்து விட்டார். அவரின் இந்த செயலை அனைவரும் கைதட்டி ரசித்தனர்.ஏற்கனவே ஐதராபாத்தில் நடந்த ‘டியூட்’ பட புரமோஷனின் போது பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு மொழி பெயர்ப்பாளரை நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.