மீசைய முறுக்கு 2 படத்தில் ‘பப்பாளி பழமே’ பாடல்

மீசைய முறுக்கு 2 படத்தில் ‘பப்பாளி பழமே’ பாடல்
ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள மீசைய முறுக்கு 2 படம் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்த படம் உருவாகியுள்ளது, இதன் டீசர் மற்றும் ‘ஆரா 10/10′ என்ற முதல் பாடல் வெளியாகி ரசிகர் கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. 80-களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் மற்றும் ஏ.சி.எஸ் அருண்குமாரின் பென்ஸ் மீடியா இணைந்து தயாரிக்கின்றன. இதில் ஆதியுடன் இணைந்து பிரபல யூடியூபர் ஹர்ஷத் கான், சைத்ரா ஜே. ஆச்சார், கேத்திகா சர்மா, ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஷா ரா மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் 2 வது பாடலான பப்பாளி பழமே’ என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment