ரஜினி 173 பட புரோமோ ஷூட்
கூலி படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஜெயிலர் – 2 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 173வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தபோதே படத்தின் அறிவிப்பு விடியோவும் அதில் இடம்பெற்ற பின்னணி இசையும் பெரிய வரவேற்பைப் பெற்றது.இந்த நிலையில், இதன் புரோமோ படப்பிடிப்பு வரும் 27ம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து முழுப்படப்பிடிப்பும் நடைபெறும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.ஜூன் மாத இறுதியில் ஜெயிலர் -2 படம் ரிலீஸ் ஆக உள்ளது.