வெறித்தனமாக தாக்கப்பட்ட
அஜித்குமார்??…
அதிரவைக்கும் பிரேதப்பரிசோதனை
ரிப்போர்ட்??…
சிவகங்கை திருபுவனத்தில் போலீசாரால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் அஜித்குமார் உடலில், 18 இடங்களில் காயம் என தகவல் வெளியாகியுள்ளது
போலீசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் அஜித்குமார், உடல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது. அஜித் குமார் உடலில், 18 இடங்களில் பெரிய அளவில் காயம் இருப்பது பிரேதப்பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அஜித்குமாரின் மண்டை ஓடு தொடங்கி, கை, முதுகு, கால்களின் பாதங்கள் வரை கடுமையான காயங்கள் இருந்துள்ளன. உடலின் வெளிப்புறம் மட்டும் அல்லாமல், உட்புறங்களிலும் ரத்தக்கசிவு உள்ளிட்ட காயங்கள் இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
அஜித்குமாரின் கழுத்துப் பகுதியில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒரு மணி நேரம் நேரத்தில் முடிந்துவிடும் பிரேதப்பரிசோதனை, சுமார் 5 மணி நேரம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது