உலகளவில் நிறுத்தப்பட்ட AI சேவைகள்!

SUSPENDED: உலகளவில் நிறுத்தப்பட்ட AI சேவைகள்!

அமெரிக்க அரசின் உத்தரவின் பேரில், Fable 5 மற்றும் Mythos 5 ஆகிய அதிநவீன AI மாடல்களின் சேவையை உலகளவில் நிறுத்துவதாக Anthropic நிறுவனம் அறிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான அச்சங்கள் மற்றும் இந்த AI மாடல்கள் தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படக்கூடும் என்ற காரணங்களை முன்வைத்து அமெரிக்க அரசு இந்தக் கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்ட இந்த மாடல்களின் சேவை திடீரென நிறுத்தப்பட்டிருப்பது உலக தொழில்நுட்ப துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், Anthropic நிறுவனத்துடன் சமீபத்தில் பல கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மேற்கொண்டிருந்த இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான TCS மற்றும் Infosys நிறுவனங்களுக்கு இந்த முடிவு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Comments (0)
Add Comment