சுந்தர் சி நடிக்கும் திகில் நிறைந்த பேய் படம்
இயக்குனர் துரை. வி.இசட். இயக்கும் புதிய படத்தில் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கிறார். ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை வி.இசட். கூட்டணி மீண்டும் இணையும் இப்படம் திகில் நிறைந்த பேய் கதையாக உருவாகிறது. இந்த படத்தை மொமண்ட்என்டர்டெயின் மெண்ட்ஸ் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன்,துர்கா தேவி ஹரி கிருஷ்ணன் தயாரிக்கின்றனர். இப்படம் குறித்து இயக்குனர் துரை கூறியது,இதில் யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் மற்றும் பிரபல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, டி.ஆர்.கே கிரண் கலை அமைக்கிறார்.படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க உள்ளோம். ரசிகர்களுக்கு இது ஒரு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும் என்றார்