ஆம்பூர் அருகே ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 573 கிலோ செம்மரக்கட்டைகள் இரண்டு காருடன் பறிமுதல்.
தப்பியோடிய குற்றவாளிகளை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி,ஜூன்.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட நடுவூர் காப்புக்காடு பகுதியில் வனவர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த கார்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது காரில் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் தப்பியோடிள்ளனர். பின்னர் வெளிமாநில பதிவு எண் கொண்ட இரண்டு கார்களை வனத்துறையினர் சோதனை செய்தபோது அதில் ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான 573 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளை காருடன் வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று வன அலுவலர் பாபு தலைமையிலான வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காரில் செம்மரக்கட்டைகள் கடத்திவரப்பட்டு தப்பியோடிய நடுவூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்