சமீபத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. முரளி இராமநாராயணன் அவர்கள் தலைமையில் சங்க நிர்வாகத்தினருடன் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதன் பேரில் முதல் கட்டமாக , பையனூர் நிலம் சம்பந்தமான ஆலோசனை மாண்புமிகு அமைச்சர் திரு. வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களின் அலுவலகத்தில் நேற்று நடந்தது . இதில் நமது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. முரளி இராமநாராயணன் அவர்கள் தலைமையில் உள்ள நிர்வாகத்தின் சார்பில்சங்கத்தின் செயலாளர் திரு. ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் திரு. .என். விஜயமுரளி , திரு.என்.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்ட போது எடுத்த படம் .