ஜெயிலர் 2- வில் கெஸ்ட் ரோலில் நடித்தது ஏன்? விஜய் சேதுபதி விளக்கம்
நடிகர் விஜய் சேதுபதி சமீபகாலமாக சிறப்பு தோற்றத்தில் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார். இந்நிலையில் ரஜினிக்காக தனது முடிவை மாற்றி ‘ஜெயிலர் 2’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியது:-சிறப்பு தோற்றங்களில் நடிப்பதை நான் முற்றிலும் நிறுத்தி விட்டேன். ஏனெனில் சிறிய படங்களில் என் சிறப்பு தோற்றத்தை பயன்படுத்தும் போது அது நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களை பாதித்து விடுகிறது. ஆனால் ‘ஜெயிலர் 2’ படம் மட்டும் அதற்கு விதி விலக்கு. காரணம் அது ரஜினி படம். ‘ஜெயிலர் 2’ போஸ்டரில் ரஜினி படத்துடன் எனது படமும் வந்தால் அது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.இயல்பாகவே ரஜினி மீது அவரது ரசிகர்கள் கவனம் செலுத்துவார்கள். அதில் நானும் இருக்கும் போது என் என் மீதும் அவர்கள் பார்வை திரும்பும் என்றார்.