சசிகுமாரின் ரசிகை நான் : அபர்ணா தாஸ்

சசிகுமாரின் ரசிகை நான் : அபர்ணா தாஸ்
புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூ லுயிஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள வெப் தொடர் ‘வதந்தி சீசன் 2’, ‘தி மிஸ்டரி ஆப்மணி’. இதில் சசிகுமார்,யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா,ரேவதி சர்மா, அர்ஜூன் நந்த குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். வரும் 7-ந் தேதி முதல் பிரைம் வீடியோவில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது. இதையொட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து நடிகை அபர்ணா தாஸ் பேசியது, ‘டாடா’ படத்திற்குப் பிறகு தமிழில் நல்ல கதையில் நடிக்க வேண்டும் என காத்திருந்தேன்.அந்த தருணத்தில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுவரை நான் ஏற்று நடித்ததில் இந்த ‘சுமையா’ கேரக்டர் சற்று வித்தியாசமாக வும், சுவாரசியமாவும் இருக்கும்.‘கண்கள் இரண்டால்..’ பாடலில் சசிகுமாரின் தலையாட்டலுக்கு எங்கள் கேரளா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருத்தி. அப்போதிருந்தே அவருடன் நடித்து விட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு இதில் நிறைவேறி இருக்கிறது என்றார்.

Comments (0)
Add Comment