தாலி கட்டியவுடன் காதல் முடிந்து விடாது: சூர்யா சுவாரஸ்ய பேச்சு
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். படத்தில் மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.சூர்யதேவார நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ள இப்படம் வரும்14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. இதில் சூர்யா பேசியது, இந்தப்படம் எனக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும். இதில் 3 பெண் கதாபாத்திரங் களை இயக்குனர் வெங்கி சிறப்பாக எழுதியிருக்கிறார். குடும்ப உறவுகள் குறித்து அழகாக பேசும் படம் இது. லவ் பண்ணிவிட்டு தாலி கட்டி திருமணம் செய்தவுடன் காதல் முடிந்து போவதில்லை. அதன் பின்னர் மனைவியை ஒவ்வொரு நாளும் எப்படி காதலிக்கிறோம் என்பது தான் முக்கியம். ஆண்டுகள் செல்ல செல்ல காதலை விட மனைவிக்கு கொடுக்க க்கூடிய மரியாதை தான் ரொம்ப முக்கியம் என்றார்.