ஜீவாவின் ‘தகப்பன்’ பட ஃபர்ஸ்ட் லுக்

ஜீவாவின் ‘தகப்பன்’ பட ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தை இயக்குநர் ரா. வெங்கட் இயக்கி வருகிறார். லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இப்படம் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா, மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார்.சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.

Comments (0)
Add Comment