யூத் -விமர்சனம்

யூத் -விமர்சனம்
பள்ளியில் படிக்கும் கென் கருணாஸ், சக மாணவர்களுடன் சேர்ந்து கொண்டு லூட்டி அடிப்பது, பெண்கள் பின்னால் சுற்றுவது என ஜாலியாக இருக்கிறார். அதோடு மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, அனிஷ்மா என மூன்று பேரை காதலிக்கிறார். இந்த நிலையில் அவரின் தாய் தேவதர்ஷினிக்கு மாரடைப்பு ஏற்பட, அவரது தந்தை சூரஜ் வெஞ்சாமுடு, சொன்ன விஷயம் அவரின் வாழ்க்கையே மாற்றுகிறது. அது என்ன? என்பதே படத்தின் மீது கதை.
இன்றைய இளசுகளின் அலட்சியம், கோபம், உணர்ச்சி மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் முகமாக திரையில் தெரிகிறார் கென். ஹீரோவாக முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்.மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி, அனிஷ்மா ஆகிய மூவரும் அழகான நடித்துள்ளனர். பல தந்தையரின் மன வேதனையை திரையில் காட்டி நடித்துள்ளார் சூரஜ் வெஞ்சாமுடு. எமோஷனலாக நடித்து கவர்கிறார்தேவதர்ஷினி. இன்றைய யூத்துகள் காதல்,பிரேக் அப் ஃபன் என ஜாலியாக இருந்தாலும், படிப்பு ரொம்ப முக்கியம் என்பதை பெற்றோரின் கண்ணீர் மூலம் அழுத்தமாக சொல்லி இயக்குனராகவும் முத்திரை பதித்துள்ளார் கென் கருணாஸ். விக்கியின் ஒளிப்பதிவு, ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

Comments (0)
Add Comment