50 கோடி கிளப்பில் இணைந்த யூத்
கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ‘யூத்’ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி ரிலீஸ் ஆனது.குறைந்த பட்ஜெட்டில் (சுமார் ₹6 கோடி) தயாரிக்கப்பட்ட இப்படம், வெளியான முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் 4 நாட்களில் 28.3 கோடி அளவுக்கு வசூலையும் குவித்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. பத்து நாட்களில் உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களைக் கவர்ந்த காதல் மற்றும் நட்பு கதையம்சம் கொண்ட இப்படம், குடும்ப பார்வையாளர்களையும் ஈர்த்ததால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.