யோகி பாபுவின் 300வது படம் “அர்ஜுனன் பேர் பத்து”

யோகி பாபுவின் 300வது படம் “அர்ஜுனன் பேர் பத்து”
அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.இது நடிகர் யோகி பாபுவின் 300வது திரைப்படம் ஆகும். இதில் ஹீரோயினாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார்.மேலும் காளி வெங்கட், அருள் தாஸ், அயலி மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சௌந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி,பவாலட்சுமண், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இமான் இசை அமைக்க,பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கிருத்திகா தங்கபாண்டி படத்தை தயாரித்துள்ளார்.

Comments (0)
Add Comment