டோலிவுட்ல என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு
தமிழ் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள நகைச்சுவை நடிகர் யோகி பாபு, தற்போது தெலுங்கு சினிமாவில் கால்பதிக்கிறார். முரளி மனோகர்ரெட்டி இயக்கும் குர்ரம் பாப்பி ரெட்டி என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இதில் தெலுங்கு பட உலகில் காமெடி கிங்கான பிரம்மானந்தம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் 2 காமெடி ஜாம்பவான்கள் ஒரே படத்தில் இணைவதால் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. அதோடு யோகி பாபுவை தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து, தனது வாழ்க்கை பயணம் குறித்த புத்தகத்தை பிரமானந்தம் பரிசாக வழங்கினார்.