விழாவுக்கு வீடியோ காலில் வந்த யோகி பாபு
பிரபு சீனிவாஸ் இயக்கியுள்ள படம் ‘அக்யூஸ்டு’. இதில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா உள்பட பலர் நடித்துள்ளனர். நரேன் பாலகுமார் இசை அமைத்துள்ளார். இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத யோகிபாபு வீடியோகாலில் பேசினார். நான் வேறொரு படப்பிடிப்பில் இருப்பதால் இதில் பங்கேற்க முடியவில்லை. இந்த படத்தில் பணியாற்றியது சிறப்பான அனுபவம். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும் என்றார்.