11 கேரக்டர்களில் நடிக்கும் யோகி பாபு
9 லைட்ஸ் சுரேஷ் முத்து தயாரிப்பில் ஆர். கிஷோர் குமார் இயக்கத்தில் காமெடி ஆக்சன் கலந்த திரில்லர் படம் உருவாகிறது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் 11 கேரக்டர்களில் யோகி பாபு நடிக்கிறார். இந்த கேரக்டர்களில் இரட்டை கதாபாத்திரங்களும் அடங்கும்.அது மட்டுமின்றி படத்தில் யோகி பாபு பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார். கதாநாயகன் முதல் வில்லன் வரை அனைத்து கேரக்டர்களில் அவரே நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் கிஷோர் குமார் கூறியது, ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குகிறது. அதன் பிளாக் பாக்ஸ் தேடும் பயணம் தான் இந்த படத்தின் கதை. விபத்தின் காரணத்தை கண்டறிய செல்லும் கதாநாயகன் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை ஆக்சன் கலந்து மிகவும் விறுவிறுப்பாக கூற இருக்கிறோம். மேலும் அதிதி ரவி,ரெடின் கிங்ஸ்லி,வி.டி.வி. கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ.வெங்கடேஷ் உள்பட பலர் நடிக்கின்றனர். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து,2-ம் கட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் தொடங்க இருக்கிறது என்றார்.