குழந்தைகளை தத்தெடுத்தது ஏன்? மனம் திறந்த ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா ஆதரவற்றகுழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், நான் குழந்தைகளை தத்தெடுத்ததற்கு காரணம் ஒரு திரைப்பட இயக்குனர் தான்.அவர் ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு என்னை அழைத்து சென்றார். அங்குள்ள குழந்தைகள் எனக்கு மிகவும் நெருக்கமானார்கள். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான்அங்கு சென்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருப்பேன். அந்த நேரத்தில் 2 குழந்தைகளை அங்கு தத்தெடுத்தேன்.
என்னுடன் அவர்கள் இல்லாவிட்டாலும் நான் அவர்களை நன்றாக கவனித்துக்கொள்கிறேன். என் அம்மா என்னை நேசிப்பது போல அந்த குழந்தை களிடமும் அதே அன்பை காட்டுகிறேன் என்றார்