70அடி உயரத்தில் இருந்து குதித்தது ஏன்?அசோக் செல்வன் கொடுத்த ப்ராமிஸ்

70அடி உயரத்தில் இருந்து குதித்தது ஏன்?அசோக் செல்வன் கொடுத்த ப்ராமிஸ்
அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள படம் அன்பில் அவன்.இதில்ஹீரோயினாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம், ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹேன்ஸ் செய்துள்ளார். இந்த படம் வருகிற 25-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழாவில் அசோக் செல்வன் பேசியது, முதலில் நான் என் அப்பா, அம்மாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.ஒரு கட்டத்தில் பட்ஜெட் அதிகமாகி கொண்டே சென்றது. அப்போது அப்பா வீடு பத்திரத்தை அடமானம் வைத்து படம் எடுத்தேன். இந்த படத்தில் ஒரு காட்சியில் 70 அடி உயரத்தில் இருந்து டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து குதித்தேன். இனி மேல் என் பெயர் இருந்தால் அந்த படத்தில் என்னுடைய கடுமையான உழைப்பு இருக்கும். அது என்னோட பிராமிஸ். அன்பில் அவன் படம் ரொம்ப ஸ்பெஷலான படம் என்றார்.

Comments (0)
Add Comment