இட்லி கடை படத்தில் வில்லன் யார்?
தனுஷ் இயக்கி நடிக்கும் படம் இட்லி கடை. இதில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க,
டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இன்பன் நிதி படத்தை வெளியிடுகிறார். இதில் அருண் விஜய் வில்லன்
கேரக்டரில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், நடிகர்களின் கேரக்டர் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அருண் விஜய் அஷ்வின் என்கிற கேரக்டரிலும், சத்யராஜ் விஷ்ணுவர்தன் என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர்.